இன்று பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முக்கிய அமைப்பாக பாராளுமன்றம் காணப்படுகின்றது. பாராளுமன்றத்தின் பாரம்பரியம், நடைமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளுக்கு எதிராக எவரும் செயல்பட முடியாது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவதூறாக பேசியுள்ளனர் என்பதை பாராளுமன்ற ஹன்ஸாட் அறிக்கையின் மூலம் தாம் அறிந்து கொண்டதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.
இது பாராளுமன்றத்தின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு எதிரான செயல்பாடாகும். இவ்வாறான செயல்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறுமாயின், குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட உரையில் மேலும் தெரிவித்தார்.(DC)