அன்று வாங்குபவர் பிழிந்தார்
இன்று வாங்குபவரைப் பிழிகிறது - தேங்காய் விலை
அன்று காய் காரம்
இன்று விலை காரம் - கொச்சிக்காய்
அன்று கல்லில் அரைத்து மாவாக்கினார்
இன்று கல்லையே அரைத்து மாவாக்கினார் - கலப்படம்
அன்று வெள்ளி வந்தால் கோழி அறுத்தார்
இன்று வெள்ளி வந்தால் callல் அறுக்கிறார் - கடைச் சாப்பாடு
அன்று ஊதி ஊதி ஆக்கினார் கொள்ளி அடுப்பில்
இன்று ஊதி ஊதிப் பெருத்தார் இலக்ட்ரிக் சமையலில்
அன்று பனாட்டு இனிப்பில் பரவசம் வந்தது பாலகனுக்கு
இன்று பன்னாட்டு இனிப்பில் பிரசவம் ஆகிறது பெயர் தெரியா நோய்கள்
அன்று கூழ் குடித்து குணமாக வாழ்ந்தார்
இன்று cool குடித்து பிணமாக ஆகிறார்
அன்று வாப்பா கஸ்டப்பட்டு
ஊட்டி வளர்த்தார்
இன்று வாப்பாவை வட்ஸ்அப்பில்
காட்டி வளர்க்கிறார்
பழமை உணவு இளமை காத்தது
புதுமை உணவு முதுமை தருகிறது...!