ஹட்டனில் சர்வதேச மகளீர் தினம் - உரிமை கோரி கவனயீர்புப் பேரணி

மு.இராமச்சந்திரன்-
வீட்டு வன்முறையிலிருந்து பாதுகாப்பு காணி உரிமை உழைப்புக்கேற்ற ஊதியம் வேலை செய்ய ஆரோக்கியமான சூழல் உட்பட தோட்ட தொழிலாளர் பெண்களின் அனைத்து உரிமைகளையும் வெண்றெடுப்போம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளீர் தினம் அட்டன் நகரில் 08.03.2017 நடைபெற்றது.

பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம் பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் சாட் விவசாய ஒன்றியம் நிலையான பயிர் செய்கை ஆராய்ச்சி அபிவிருத்தி நிருவனம் காணி மற்றும் விவசாய மருசீரமைப்பு அமைப்புகள் ஆகியன இனைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளீர் தின நிகழ்வானது.

அட்டன் டீ.கே.டபில்யூ காலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு உரைகள் இடம்பெற்றதுடன் வீதி நாடகம் விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் இடம்பெற்றதுடன் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்பிலான மகஜரின் பிரதியையும் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் செயலாளர் பீ.சுமனசிரியிடம் கையளிக்கப்பட்டது .

மேலும் மண்டபவாயிலிருந்து அட்டன் பிரதான நகரை நோக்கி பேரணியாக வந்து அட்டன் மணிக்கூட்டு சந்தியினூடாக பஸ்தரிப்பிடம் வரை பதாதைகள் ஏந்தியவண்ணம் கவனயீர்ப்பு பேரணி சென்று அட்டன் டெலிகொம் சந்தியில் நிறைவந்தது.

பேரணியில் பெருந்திரலானோர் கலந்துகொண்டு பெண்கள் உரிமையை பாதுகாப்போம் வீடு கட்ட 20 பேர்ச்சர்ஸ் விவசாயம் செய்ய 2 ஏக்கர் வேண்டும் என கோசம் எழுப்பினர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -