இலங்கை வந்துள்ள சீனா செங்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்து கலந்துரையாடிய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணத்தில் முதலீடுகள் செய்வது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தினார்.
இலங்கை வந்துள்ள சீனா செங்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலையியற் குழு உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்து அங்கு பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இதன்போது, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் அக்கட்சியின் பிரதித்தலைவர் Ao Xigui தலைமையிலான குழு சந்தித்தது.
இதன் போது, தொழில்நுட்ப உதவிகளை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.