ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இராணுவ அதிகாரியை குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐந்து இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று கைதுசெய்யப்பட்ட இராணுவ அதிகாரியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.(வீ)