அரச சொத்துக்கைள விற்று சாப்பிடும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது - மஹிந்த

அரச சொத்துக்கைள விற்று சாப்பிடும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தும்முல்ல சம்புத்த ஜயந்தி மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச சொத்துக்களை விற்பனை செய்யாது பொருளாதாரத்தை மீட்க முடியும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.எனினும், இந்த அரசாங்கம் சொத்துக்களை விற்று சாப்பிடும் கொள்கைகளை பின்பற்றி வருகின்றது.

வயல் சட்டம் தொடர்பான விடயங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளன, கப்பல்கள் வரும் வரையில் காத்திருக்க நேரிட்டுள்ளது.எமது ஆட்சிக் காலத்தில் சொத்துக்களை விற்பனை செய்யவில்லை, மாறாக சொத்துக்களுக்கான பெறுமதியை அதிகரித்தோம்.

அன்று தலைவர் பிலிப் குணவர்தன விவசாயிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார் எனினும் இன்றோ விவசாயிகளை கீழே தள்ளிவிடும் தலைவர்களே இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -