பைஷல் இஸ்மாயில்-
அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை, அந் நூர் மகா வித்தியாலயம் கல்வியமைச்சின் புதிய திட்டமான 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகும் குறித்த பாடசாலையின் பெயர் நீக்கப்படவில்லை எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களினால் கடந்த இரண்டு தினங்களாக பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் தனது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
குறித்த பாடாசாலையை நீக்கியமை தொடர்பாக நான் கிழக்கு மாகாண கல்வியமைச்சரையும் அதன் செயலாளுடனும் மத்தியரசின் கல்வி அமைச்சின் செயலாளருடன் நான் தொடர்பினை மேற்கொண்டு உண்மைத்தன்மையை அறிந்துகொண்டேன் குறிப்பாக அவர்களினால் இப்பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஆவணங்களையும் வழங்கியுள்ளனர். ஆனால் இவ்விடயத்தின் உண்மைத்தன்மையை அறிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது நன்றல்ல எனவும் இது தொடர்பில் அவர்கள் என்னிடம் கேட்டிருந்தால் அவர்களுக்கு மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் ஆதாரபூர்வமான பதிலை வழங்கி இருப்பேன்.
விசேட அமெரிக்க திட்டமும், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும்திட்டத்தினுள்ளும் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் இப்பாடசாலைக்கு 2 மில்லியன் வந்த நிலையில் அது தாமதம் அடைந்த நிலையில் உள்ளது. அது மிக விரைவில் வழங்கப்படுவதற்கு நாம் ஏற்பாடு மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் பாடசாலை மாணவர்கள் பாடசாலை க்கு செல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இதை வைத்து ஒரு சிலர் குளிர்காய்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.
அதிகாரமுள்ள எம்மால் இந்த ஆட்சியில் பிந்தங்கிய பாடசாலையை உள்வாங்காமல் நாம் இருக்கப்போவதில்லை அப்படி நாம் பாடசாலை மாணவர்களின் கல்வியில் விளையாடாமல் இருப்போம். ஒரு சிலரின் அரசியலுக்காக குறித்த விடையத்தை வைத்து அரசியல் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது. அத்துடன் இம்மாணவர்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்றுக்கொண்டு அவர்கள் தனது பிள்ளைகளின் கல்விக்காகவே செயற்பட்டனர். அதற்காக அவர்களின் கல்வியை பாதிப்படையச்செய்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடையம் அதை கல்வியமைச்சரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆகவே நான் மேற்கொண்ட சிந்தனையில் அட்டாளைச்சேனை அந்-நூர் வித்தியாலயமும், பாலமுனை மின்ஹாஜ் வித்தியாலமும் உள்வாங்கப்பட்டுள்ளது ஆகவே மாணவர்களின் விளையாடாமல் அவர்களின் கல்விக்கு இடையூரு வழங்காமலும் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.