அஷ்ரப் ஏ சமத்-
நியுசிலாந்து நாட்டின் போக்குவரத்து, உணவு, குடிவரவு குடியகழ்வு, அமைச்சா் டேவிட் பெனிட் இன்று (7) கொழும்பு -07 தெவட்டஹா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து துஆப் பிராத்தனையில் ஈடுபட்டாா். இலங்கையில் முதலிடுவதற்காக நியுசிலாந்து வர்த்தக துாதுக்குழுவுடன் இலங்கை வந்துள்ள அமைச்சா் இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலிடுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தக பிரநிதிகளுடனும் பேச்சுவாா்த்தை நடாத்த உள்ளதாக தெரிவித்தாா்.
கொழும்பு தெவட்டஹா பள்ளிவாசலின் நிர்வாகசபைத் தலைவா் றியாஸ் சாலி, நியுசிலாந்து அமைச்சரை பொன்னாடை போற்றி கௌரவித்தாா். இந் நிகழ்வில் பிராந்திய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளா் முக்தாா் மறைக்காா், மற்றும் இலங்கையின் நியுசிலாந்து நாட்டிற்கான கௌரவ கவுன்சிலா் சேனக்க சில்வாவும் கலந்து சிறப்பித்தாா்.