ஓட்டமாவடி மஜ்மா நகர் ரஹ்மா மஸ்ஜித்யில் ஜும்ஆ ஆரம்பம்..!

எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஜ்மா கிழக்கு காகித நகர் கிராமத்தில் இயங்கி வருகின்ற ரஹ்மா பள்ளிவாயலில் கடந்த 03.03.2017ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இனி வரும் காலங்களில் ஜும்ஆ தொழுகை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

அக் கிராமத்தில் உள்ள மக்கள் ஜும்ஆ தொழுகைக்காக மிக நீண்ட தூரம் செல்வதாலும், குறித்த நேரத்திற்குல் ஜும்ஆ கடமைகளை செய்ய முடியாத காரணத்தினாலும் கிராம மக்கள் நிர்வாகத்திடம் வேண்டிக் கொண்டதற்கமைய குறித்த பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகையினை ஆரம்பித்ததாக பள்ளிவாயலின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.அஸ்ரப் (சிறாஜி) தெரிவித்தார்.

இனி வரும் நாட்களில் இக் கிராம மக்கள் எவ்வித அசௌகரியங்களும் இல்லாமல் குறித்த பள்ளிவாயலுக்கு ஜும்ஆ தொழுகையில் கலந்து கொள்ளலாம் என்றும் பள்ளிவாயலின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இப் பள்ளிவாயலின் முதலாவது ஜும்ஆ உரையினை கடந்த வெள்ளிக்கிழமை கல்குடா மஜ்லிஸுஸ் சூறா அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ஹாமீத் (சிறாஜி) நிகழ்த்தினார். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10.03.2017 ம் திகதி ஜும்ஆ பிரசங்கத்தை இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷெய்க் வீ.ரீ.எம்.முஸ்தபா (தப்லீகி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -