அபு அலா-
இன்று வெளியான சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சாதனையின் முதற்படியில் ஏறிய நீங்கள் இன்னும் பல சாதனைகளை நிலை நாட்டவதுடன் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
அவரது அறிக்கையில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
இன்று வெளியான சாதரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தொடந்தும் தங்களது சாதனைகளை நிலைநாட்டி உயர் தரத்திலிருந்தும் பட்டப்படிப்பிலும் உங்களது சாதனைகளை பெறவீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றதுடன் உங்களது பெற்றோர்களுக்கும், கற்றுத்தந்த ஆசான்களையும் தொடர்ந்தும் கண்ணியத்துடன் பார்க்கவேண்டிய கடமைப்பாடு உங்களிடம் உள்ளது.
அது போல், இப்பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றவர்கள் இன்னும் பல முயற்சிகளை பெறுவதன் மூலம் சாதனைகளை நிலை நாட்ட ஓர் சந்தர்ப்பம் எனவும் அதற்கான நாம் தோற்றவர்கள் என எண்ணிவிடாமல் நீங்கள் தொடந்தும் முயற்சி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.