நிந்தவூர் அல்-மினா வித்தியாலய மாணவன் அப்துல் றஹீம் முன்சிப் இலாக்கி சாதனை

முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்-

நிந்தவூர்-8. கமு/அல்-மினா வித்தியாலத்தில் கவில் கற்ற மாணவன் அப்துல் றஹீம் முன்சிப் இலாக்கி"2016ம், ஆண்டு க.பொ.தா சாதாரண பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகள் 8A,1B.பெற்று அப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.


மேலும் நிந்தவூர்-8. கமு/அல்-மினா வித்தியாலையத்தில் 2016ம், ஆண்டிற்கான க.பொ.தா.சாதாரண பரீட்சைக்கு 36.மாணவ மாணவிகள் தோற்றியுள்ளன அதில் 34ங்கு, மாணவ மாணவிகள் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இதில் மனவேதனைக்குரிய விடையம் என்னவென்றால் 36 மாணவ மாணவிகள் பரீட்சைக்கு தோற்றியுள்ள நிலையில் அதில் ஒரு கெட்டிக்காற மாணவி நான்கு பாடங்கள் எழுதிய நிலையில் அம்மாணவி "சிக்கன்கொணியா" காய்ச்சலினால் பாதிக்கப்படு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அம்மாணவிக்கு மீதிப் பாடங்கள் எழுத முடியாதுபோய்யுள்ளது. எழுதிய நான்கு பாடங்களிலும் நல்ல பெறுபேறுகளை பெற்றுள்ளதாக அப்பாடசாலை ஆசிரியர்கள் மனவருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சென்ற 2015ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் நிந்தவூர் -8 அல்-மினா வித்தியாலையம் கல்முனை வலய கல்வி மட்டத்தில் 3ம் இடத்தையும் நிந்தவூரில்1ம் இடத்தையும் பெற்று நிந்தவூருக்கே பெருமை சேர்த்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -