கிண்ணியாவில் டெங்கு தானா? மக்கள் சந்தேகம் : ஆய்வு செய்யுமாறு ஜானாதிபதியிடம் கோரிக்கை



சை.மு.ஸப்ரி-
கிண்ணியாவில் பரவும் காய்ச்சல் டெங்கு தானா என மக்கள் சந்தேகம் தெரிவிப்பதால் இது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார்.

இன்று (செவ்வாய்) காலை ஜனாதிபதியை அவரது உத்தியோக பூர்வ அலுவலகத்தில் சந்தித்த இம்ரான் எம்.பி கிண்ணியாவில் பரவும் காய்ச்சல் குறித்தும் அதனால் ஏற்பட்ட மரணங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினார்.

கிண்ணியாவில் கடந்த இரண்டரை மாதங்களாக இந்த அனர்த்த சூழ்நிலை நிலவுகின்றது. இதனால் இதுவரை 1200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். எனினும் இதுவரை இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. மாறாக நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு மரணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

எனவேää கிண்ணியாவில் பரவும் இந்தக் காய்ச்சல் டெங்கு தானா என்பது குறித்து உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக கிண்ணியாவை அனர்த்த வலயமாகப் பிரகடனப்படுத்தி விசேட மருத்துவக்குழுக்களைக் கிண்ணியாவுக்கு அனுப்பி ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்த ஆய்வின் பெறுபேறுகளை மையமாக வைத்து நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னேடுக்க வேண்டும் என இம்ரான் எம்.பி கேட்டுக் கொண்டார்.

அதேபோல குழந்தை நோய் விசேட நிபுணர் மயக்க மருந்து கொடுக்கும் நிபுணர் வைத்தியர்கள் தாதியர் ஏனைய தேவையான ஆளணியினர் போன்றோரை கிண்ணியா வைத்தியசாலைக்கு நிரந்தரமாக நியமித்துத் தருமாறும் வைத்தியசாலையின் ஏனைய பௌதீகத் தேவைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த விடயங்கள் குறித்து தான் ஊடகங்கள் மூலம் அறிந்து அவதானம் செலுத்தி வந்ததாக தெரிவித்த ஜனாதிபதி இந்த விடயங்கள் குறித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடன் முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் பணிப்புரை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -