அப்துல்சலாம் யாசீம், ஏ.எம். கீத்-
திருகோணமலை கோனேஸ்வர கடற்பரப்பில் சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக மீன்பிடி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஈ.எம்.சி.போயகொட தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 07 பேரையும் பினையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் 23ம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் சோலையடி-1,ஜமாலியா-1,சல்லி மற்றும் சாம்ல்தீவு-3, தம்பலகமம்-1, வெள்ளைமணல்-1 போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த மீனவர்கள் என்பது குறிப்பிடதக்கது.