இதனடிப்படையில் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் அதனைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார் .
இந்நிலையில் எதிர்காலத்திலும் எந்தவொரு அரசியல் சூழ்நிலையின் கீழும் மீண்டும் இந்த மதுபானதொழிற்சாலை நிர்மாணிக்கப்படாமலிருக்கும் வகையில் நீதிமன்றதடையுத்தரவொன்றை பெறுமாறு வாழைச்சேனையின் பிரதேச சபையின் செயலாளருக்குபணிப்புரை விடுத்துள்ளேன்.
நாம் எமது மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபாவனையை நிறுத்துவதற்காக பலநடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்,
இதனடிப்படையிலேயே போதைப்பொருளுக்கு எதிரான மாபெரும் பேரணியொன்றையும்நாம் அதிமேதகு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் தலைமையில் ஏறாவூரில்நடத்தியிருந்தோம்,
எமது மாகாணத்தில் யுத்தத்துக்குப் பின்னரான காலப் பகுதியில் போதைப் பொருளின்பாவனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பதுடன் எமக்கு கிழக்கில் மேலும் போதைப்பொருள் பாவனையை அதிகரிக்கின்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்பதைமிகத் தௌிவாகக் கூறிக் கொள்கின்றேன்,
கிழக்கிலிருந்து போதைப் பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் கிழக்குமாகாண சபை உறுதியாக இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்,
அத்துடன் இந்த மதுபான தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் என் கவனத்துக்குகொண்டுவரப்பட்டது,
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் கலாசாரம் மீண்டும் நாட்டுக்குள்தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என்பது அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவும்முடியாது.
அத்துடன் குறித்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டமை தொடர்பில்தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிகின்றேன்.
குறித்த ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு மட்டக்கப்புமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்,இந்த விடயம்தொடர்பில் பொலிஸ் தரப்பில் நியாயமான விசாரணை இடம்பெற வேண்டுமெனவும்கோரிக்கை விடுத்துள்ளேன்,
இனிமேலும் ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான தாக்குதல்கள் நடவடிக்கைகள் எமதுநாட்டின’ மீது சர்வதேச ரீதியில் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல்கள் என்பதைசுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அஹமட்(பொறியியலாளர்)