க.கிஷாந்தன்-
மலையக கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொகவந்தலாவ பொகவான தோட்டத்திற்கு செல்லும் பாலம் ஒரு கோடி 80 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு 31.03.2017 அன்று மாலை வைபவ ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிஸின் மத்திய மாகாண சபை உறுப்பனர் கணபதி கனகராஜின் வேண்டுக்கோளுக்கு அமைய இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக ஒதுக்கப்பட்ட இந்த நிதியில் இப்பாலம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் ரமேஷ்வரன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சக்திவேல், கணபதி கனகராஜ், பிலிப்குமார், இ.தொ.காவின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.