ஓட்டமாவடி 3ம் வட்டார எம்.கே. வீதியில் வசித்து வந்த எல்லோராலும் ஆசிம்மா என்று அழைக்கப்பட்டு வந்த ஹாஜியானி செய்னம்பு என்பவர் இன்று (22) ம் திகதி தனது 107வது வயதில் வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜுவூன்.
இவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த மர்ஹும் அச்சி ஹாஜியாரின் மனைவியாவார். வபாத்தான ஆசிம்மா (செய்னம்பு) அவர்கள் 35 வயதில் இறுதிக் கடமை ஹஜ்ஜினை நிறைவேற்ற புனித மக்கா நகருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கென்று அவர் பெற்றுக் கொண்ட கபன் ஆடையினை இவ்வளவு காலமும் பாதுகாத்தும் வந்துள்ளார்.
நான் மரணித்தால் மக்கா நகரில் பெற்றுக் கொண்ட அந்த ஆடையினால்தான் எனக்கு கபனிட வேண்டும் என்று குடும்பத்தாருடன் வேண்டிக் கொண்டதிற்கினங்க அவருக்கு அவர் ஆசைப்பட்டது போல கபனிட்டு அவருடைய ஜனாஷா இன்று ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ மஸ்ஜித் மைய வாடியில் அஷர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாருக்கு உயர் தரமான ஜன்னதுல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்.