மு.இராமச்சந்திரன்-
கலனிவெளி கம்பனியின் டிலரி குரூப் தோட்டத்தில் தேயிலை மலையில் மகளீர் தின நிகழ்வு இடம்பெற்றது. சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் 08.03.2017 இடம்பெற்றுவருகின்றது.
டில்லரி குரூப் தோட்ட நீர்வாகமும் மனிதவள முகமைத்துவ பிரிவும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வில் 40 வருடங்கள் தொழிலாளியாக கடமையாற்றிய ஒய்வு பெற்ற 102 வயதுடைய நாகம்மா என்ற பெண்மனி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் தேயிலை மலையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி மகளீர் தினம் கொண்டாப்பட்டமை குறிப்பிடத்தக்கது.