
எம்.ரீ.எம்.பாரிஸ்-
ஓட்டமாவடி நவீன சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்ட விதத்தில் பல்வேறுபட்ட ஊழல் மற்றும் நிதி மோசடிகள் இடம் பெற்றிருப்பதாக ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கான பிரதேச அரச உயர் மட்ட அபிவிருத்தி விடயம் தொடர்பாக ஆராயும்; கூட்டத்தின் போது பொது மக்களினால் இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக உரிய விசாரனைகளை நடாத்த வேண்டும் என மக்கள் வேண்டிக்கொண்டமைக்காக இப்பூங்கா அமைப்பது தொடர்பாக முறைகேடுகள் இடம் பெற்றிருக்கின்றதா? என்று ஆராய ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஊடாக நிதி மோசடி குற்ற புலனாய்வு பிரிவினருக்கு (குஊஐனு) இவ்விடயத்தினை கையளிக்க நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இப்பூங்காவானது கடந்த அரசாங்கத்தின் 'புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் 2 கொடி ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டு 2014.03.21ஆம் திகதி மக்களின் பாவணைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறிப்பிட்டகாலத்துக்குள் சபையின் உரிய பராமரிப்பு இன்மை காரணமாக இப்பூங்கா பழுதடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன இப்பூங்கா நிர்மானம் தொடர்பில் உத்தியோக பூர்வ அனுமதிகளே உரிய முறையான அங்கீகாரங்களே வழங்கப்படவில்லை என்றும் அதற்காக அனுமதியை இந்திட்டத்திற்கான மதிப்பீட்டு குழு வழங்க வில்லை அதனை மீறியே இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்ற குற்ற சாட்டினை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வரும் நிலையில் பல் வேறு பட்ட ஐயங்கள் இப் பூங்கா நிர்மானிக்கப்பட்ட விதத்தில் மேலும் நிலவுகின்றது.
இப் பூங்கா மூடப்பட்டு இருப்பது தொடர்பாக அரச ஊடகங்களில் பல செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டிருத்தமையினை அடுத்து மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சிந்திரவேல் அவர்களின் துரித நடவடிக்கை காரணமாக கடந்த 2016.02.19 மீண்டும் இப் பூங்காவினை சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு கையளிக்கப்பட்டது.
ஒரு சில மாதங்கள் வெறும் கண் துடைப்புக்காக இது திறந்து வைக்கப்பட்டிருத்தும் தற்போது இது மூடப்பட்டு காணப்படுகின்றது.
இப்பூங்காவினை வேறு பெருந்தமான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச அபிவிருத்தி குழு யோசனை ஒன்றினை பிரதேச சபை செயலாளருக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



