வவுனியா புளியங்குளம் புரட்சி இளைஞர் கழகத்தின் மைதான திறப்பு விழா.!

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் "Youth Got Talent - 2016" மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில், புளியங்குளம் வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் புரட்சி இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவு பெற்ற மைதான புனரமைப்பு, சுற்றுவேலி நிர்மாணம் என்பவற்றின் திறப்பு விழா அண்மையில் இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் இளைஞர் சேவைகள் அதிகாரி திரு சதீஸ் தலைமையில் நடைபெற்றது. 

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்டதுடன்  சிறப்பு அதிதிகளாக வட மாகாண சபை உறுப்பினர்களான திரு செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வினோ, வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு ஸ்ரீ.கேசவன், திரு வாசலை பசிந்து, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -