ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தி..!

நீதி மற்றும் சமத்­து­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட புதி­யதோர் தேசத்தில் சமா­தா­னமும் சுபீட்­சமும் கிடைக்­கப்­பெற்ற மக்­க­ளாக வாழும் பாக்­கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது;

மனி­தர்கள் தமது சுதந்­தி­ரத்­துக்­காக மேற்­கொண்ட போராட்­டங்­க­ளினால் மானுட வர­லாறு அழகு பெற்­றுள்­ளது. இலங்­கை­ய­ரான நாமும் அவ்­வா­றான பெரு­மை­மிகு சுதந்­திரப் போராட்ட வர­லாற்­றுக்கு உரித்­தா­ன­வர்­களே. பல நூற்­றா­ண்­டு­க­ளாக நீடித்த மன்­ன­ராட்சிக் காலத்­தி­லி­ருந்து நவீன ஜன­நா­யகம் வரை நாம் கடந்து வந்த பய­ணத்தில் அவ்­வா­றான போராட்­டங்கள் பற்­றிய இத­மான நினை­வு­க­ளுடன் கசப்­பான நினை­வு­களும் பதி­வாகி இருக்­கின்­றன. சுதந்­தி­ரத்­துக்­காக பாடு­பட்ட எம் முன்­னோர்­க­ளி­னதும் மக்­க­ளி­னதும் தியா­கத்­துக்கு என்றும் நாம் கடன்­பட்­ட­வர்­க­ளாவோம். உண்­மை­யி­லேயே அவர்கள் சிந்­திய வியர்­வையும், இரத்­தமும், சுவா­சமும் கலந்த தியா­கத்­தையே வர­லாறு எமக்கு உணர்த்­து­கின்­றது.

69 ஆவது சுதந்­திர தின விழா நடை­பெறும் இவ்­வே­ளை­யா­னது, எமது நாட்­டிற்கு மிகவும் தீர்க்­க­மான சவால்­மிக்­க­தொரு சந்­தர்ப்­ப­மாகும். அண்­மைய வர­லாற்றில் நாம் அடைந்த ஜன­நா­யக சுதந்­தி­ரத்தைப் பாது­காத்து, தேசிய சிந்­த­னையின் ஊடக அனைத்து இனங்­களும் சமா­தா­னத்­துடன் வாழக்­கூ­டிய நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பு எமது தோள் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது. ஜன­நா­யகம், சுதந்­திரம் போன்ற வார்த்­தை­களைக் கொண்டு வர்­ணிக்­கப்­பட்ட இருண்ட யுகத்­தி­லி­ருந்து நாம் விடு­தலை பெற்­றுள்ளோம். 

இருளில் மூழ்கிக் கொண்­டி­ருந்த ஜன­நா­ய­கத்­தையும் மனி­தா­பி­மா­னத்­தையும் மீண்டும் சுடர் ­விட வைப்­ப­திலும் நாம் வெற்­றி­பெற்­றுள்ளோம். ஆயினும் சுதந்­தி­ரத்தை மேலும் அர்த்­த­முள்­ள­தாக்க வேண்­டு­மாயின் வறு­மை­யி­லி­ருந்தும் நோய்­க­ளி­லி­ருந்தும் விடு­ப­டு­வது மட்­டு­மன்றி, இனஇ மத, சாதி பேதம் போன்ற வரை­ய­றைக்குள் சிறைப்­பட்டு மோச­மான ஆத்­மீக மற்றும் பண்­பாட்டு வறு­மைக்­குட்­பட்­டுள்ள மக்­க­ளையும்இ சமூ­கத்­தையும் அவற்­றி­லி­ருந்து விடு­வித்து, மனித உரி­மைகள் மற்றும் நீதி நெறி­களை மதிக்கும் தேசத்தை உரு­வாக்க வேண்டும்.

நீதி மற்றும் சமத்­து­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட புதி­யதோர் தேசத்தில் சமா­தா­னமும் சுபீட்­சமும் கிடைக்­கப்­பெற்ற மக்­க­ளாக வாழும் பாக்­கியம் எமக்கு கிட்ட வேண்டும். அறி­யா­மையை அறி­வி­னாலும், பொய்­மையை வாய்­மை­யி­னாலும், பழி தீர்க்கும் எண்ணத்தைக் கருணையினாலும் இம்சையை அஹிம்சையினாலும் வெற்றி கொள்ளக் கூடிய மனிதத்தை மதிக்கும் சுதந்திரத்தின் சுவர்ண பூமியாக எமது தாய்நாடு உருவாக வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -