தகவல் அறியும் சட்டம் அமுல், இனி வெளிப்படையாக பணியாற்றவேண்டும்.!

ஹாசிப் யாஸீன்-
கவல் அறியும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச காரியாலயங்களும், உத்தியோகத்தர்களும்வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டியுள்ளது என சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர்ஐ.எம்.றிகாஸ் தெரிவித்தார்.

நாட்டின் 69வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக வளாகத்தில் இன்று (04) சனிக்கிழமை உதவிபிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உதவி பிரதேச செயலாளர் தேசியக்கொடியேற்றி வைத்து உத்தியோகத்தர்களின் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கணக்காளர்; ஏ.எல்;.நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், சமுர்த்தி தலைமையகமுகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர்எம்.நளீர், நிதி உதவியாளர் யூ.எல்.எம்.ஹனீபா, பிரதம முகாமைத்துவ உதவியாளர்களான ஏ.சீ.எம்.பளீல்,எம்.ஏ.றசீட், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நஜிபர், சமுர்த்தி உதவி முகாமையாளர்களான றியாத் ஏ.மஜீத், எம்.எம்.எம்.முபாறக், எம்.யூ.ஹில்மி உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்,

இன்று நாட்டில் தகவல் அறியும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவூட்டல்கள்உத்தியோகத்தர்களுக்கு இடம்பெறவுள்ளது. மேலும் அரச காரியாலங்களிலுள்ள தகவல்களை பொதுமக்கள்கோருமிடத்து அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இச்சட்ட மூலத்தில் உள்ளடங்கப்பட்டுள்ளது. எனவேஎதிர்காலத்தில் அரச காரியாலயங்களும், உத்தியோகத்தர்களும் வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றவேண்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம இவ்வாண்டினை வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கமைவாகசமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறுதிட்டங்களை வகுத்து செயற்படவுள்ளது. இதன்பிற்பாடு அரசாங்கம் நிவாரணம் பெறும் குடும்பங்களிலிருந்துஇவ்வருடம் 10 சத வீதமானவர்களை நிவாரணத் திட்டத்திலிருந்து நீக்கவுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் தேசப்பற்றுள்ளவர்களாக நாட்டின் அபிவிருத்திற்கும், மக்களின் சேவைக்கும் தங்களைதயார்படுத்திக் கொள்ளவேண்டும். காரியாலங்களுக்கு சேவையினைப் பெறவரும் பொதுமக்களின் பணிகளை உத்தியோகத்தர்கள் கால தாமதமின்றி செய்து கொடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் எமது பிரதேசசெயலகத்தில் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -