கிழக்கில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - பிரச்சினைகளை எதிர்நோக்கிய மக்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

இலங்கையில் இயங்கிவரும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று 23 வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவு,கிளினிக் பிரிவு போன்ற பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களையும்,கஷ்டங்களையும் எதிர்நோக்கி வருகின்றர்.

இதேவேளை இப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்ப மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை தவிர ஏனைய பிரிவுகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இந் நிலையில் தூர இடங்களில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வெளி நோயாளர் மற்றும் கிளினிக் பிரிவுகளில் சிகிச்சை பெறுவதற்காக வருகைதந்த நோயாளர்கள் சிகிச்சைக்காக காத்திருந்து பின்னர் திரும்பிச் சென்றனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அறிவித்தல் பலகையில் அறவித்தல் என்று குறிப்பிட்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அடையாள வேலை நிறுத்தம் இன்று காலை 8.மணி முதல் நாளை காலை 8.மணி வரை தொடரும். இதனால் வெளிநோயாளர்; பிரிவு மற்றும் கிளினிக் என்பன நடைபெறமாட்டாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -