வவுணதீவில் சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (08.02.2017) வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் ரீ. சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.

க.பொ.த உயர்தரம் கற்கும் 2017ஆம், 2018ஆம் ஆண்டுகளில் பரீட்சை எழுதவிருக்கும் தெரிவு செய்யப்பட்ட 116 மாணவர்களுக்கு மாதாந்தம் 1500 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கென இப் புலமைப் பரிசில் பணமும் சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது.

குறைந்த வருமானம் பெறும் சமூர்த்தி பயனாளிக் குடும்பங்களிலிருந்து இந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டடிருந்தனர்.

இந்நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் இங்கு வருகை தந்த மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பேசுகையில்,

எம்முடன் இறுதிவரை சேர்ந்திருக்கும் அழிவில்லாச் சொத்து கல்வி ஒன்றுதான், மாணவர்கள் தமது கல்வியை இலட்சியத்துடன் கற்று தாய்தந்தையருக்கும் நாட்டுக்கும் நற்பெயரை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அரசினால் வழங்கப்படும் இப்புலமைப்பரிசில் மூலம் கிடைக்கும் பணத்தினை கல்வி முன்னேற்றத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிப்தொர புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பித்திருந்த போதிலும் திணைக்களத்தினால் கேட்டுக் கொண்டதற்கமைவாக, வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்கள் மாத்திரம் நேர்முகப் பரீட்சையூடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் பொருளாதார வறுமைக்கு மத்தியிலும் பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்து கற்பிக்கின்றனர், தமது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும், ஒரு நல்ல தொழிலைப் பெறவேண்டும் எனும் எண்ணத்துடன்தான் பெற்றோர்கள் இருப்பர்.

அவர்களது அந்த எண்ணத்தை மாணவர்களாகிய நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அதேபோன்று மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கென இன்று இந்த புலமைப் பரிசில் பணத்தினை வழங்கும் அரசின் நோக்கத்தினையும் இதனைப் பெறும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். என பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, வாழ்வின் எழுச்சி முகாமைத்துவப் பணிப்பாளர் ரீ. மகேந்திரன், சமூகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் கே.ஜெயக்குமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் பெற்றோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -