ஏக்கல பிரதேசத்தில் ஆட்சேபித்து, மாபெரும் கண்டனப் பேரணி


மினுவாங்கொடை நிருபர்-

கொழும்பில் சேரும் குப்பைக் கூளங்களை, ஏக்கல பிரதேசத்திலுள்ள காணியொன்றில் கொட்டுவது தொடர்பில், அரசாங்கம் எடுத்துள்ள முடிவினை ஆட்சேபித்து, மாபெரும் கண்டனப் பேரணியொன்று ஏக்கலவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

"கொழும்பு குப்பைகள் ஏக்கலைக்கு வேண்டாம்" என்ற தொனிப் பொருளில், (09) வியாழக் கிழமை காலை 8 மணிக்கு, ஏக்கல சந்தியில் ஆரம்பமாகும் இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, ஏக்கலவில் அமைந்துள்ள மக்கள் நலன்புரி அமைப்பொன்று, ஏக்கல பிரதேச வாழ் மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 

கடந்த பல வருட காலமாக, கொலன்னாவ குப்பை மேடு தொடர்பில், அரசாங்கத்திற்கும் அப்பிரதேச வாழ் மக்களுக்கிடையிலும் பல தரப்பட்ட சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -