அதிரவைக்கும் முஷர்ரஃப் மீது வழக்குப்பதிவு..!

ஜெம்சித் ஏ றகுமான்-
ரசியலின் முதுகெழும்பாக திகழ்வது ஊடகமும், ஊடகவியலாளர்களுமே. அரசியவாதிகளின் நல்ல செயற்பாடுகளை போற்றுவதும், சமூகத்திற்கு எதிராக செயற்படும் போது அதனை வெளிப்படையாக கூறுவதும், எழுதுவம் ஊடகவியலாளர்களாக மட்டுமே இருக்க முடியும். அண்மைக்காலங்களாக அரசியல்வாதிகளை தொலைக்காட்சி அலைவரிசை மூலம் நேரடியாக அழைத்து அவர்களிடம் மக்கள் சார்பான வினாக்களை கேட்டு தெளிவை பெறும் நிகழ்ச்சிகள் பொதுவாக அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இடம் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி அரசியல் அரங்கில் பெறுமதி வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாக நோக்கப்படுகிறது.

அரச தொலைக்காட்சியான வஸந்தத்தில் அதிர்வு எனும் அரசியல் நிகழ்ச்சி அண்மைக்காலங்களில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி மூலம் அரசியல் பிரமுகர்கள் அழைக்கப்பட்டு, வினாக்கள் தொடுக்கப்படுவதன் மூலம் அரசியல் பார்வையில் இருக்கும் அதிகமான சந்தேகங்களுக்கு தெளிவினை பெறக் கூடிய வகையில் நெறிப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அதிர்வு அரசியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் ஒருவரான முஷர்ரஃப் மீது அண்மையில் வழக்குப்பதிவு ஒன்று இடம்பெற்றிருப்பதாக இலத்திரனியல் ஊடகம் மூலம் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. ஒரு அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர் மீது வீண்பழி சுமத்தியதற்காகவே அந்ந வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது.

அரசியல் நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் பொதுவாக அங்கு தொகுப்பாளரால் கேட்ப்படும் வினாக்களுக்கு பதில் அளிக்க கூடியவகையில் தன்னை தயார்படுத்தி கலந்து கொள்வது வழமை காரணம் அந்த இடங்களில் பக்கச்சார்பில்லாமல் நடுநிலையான வினாக்களே அதிகம் வினவப்படுகின்றன. ஒரு ஊடவியாலாளர் அல்லது தொகுப்பாளர் பக்கச்சார்பான வினாக்களை தொடுப்பாரேயானால் அவர் ஊடக தர்மத்தை மீறி விடுகிறார். அதிர்வு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முஷர்ரஃப் ஐ பொறுத்தவரை நடுநிலையாக கேள்விகளை அரசியல் பிரமுகர்களிடம் மக்கள் சார்பாக வினவும் வல்லமையை கொண்டிருக்கிறார். அவரினால் கேட்கப்படும் வினாக்கள் காலத்திற்க்கு தேவையானவையாகவே இருப்பதனால் அந்த நிகழ்ச்சியை அதிகமான நேயர்கள் பார்வையிடுகிறார்கள்.

ஒரு ஊடகவியலாளன் அரசியல் பிரமுகர்களுக்கு ஏற்ற வகையில் பக்கச்சார்பாக வினாக்களை கேட்க வேண்டும் என நினைப்பது தவறாகும்.அரசியல் தெளிவை பெறுவதற்கான நடத்தப்படும் நிகழ்ச்சியில் பக்கச்சார்பாக கேள்விகளை கேட்பது நிகழ்ச்சியின் போக்கை திசை திருப்பிவிடும். அரசியலில் கால் பதித்துவிட்டால் விமர்சனங்களுக்கு அஞ்சிவிடக் கூடாது. வெளிப்படையான கேள்விகளை நேரடியாக கேட்கும் முஷர்ரஃப் போன்ற நடுநிலையான ஊடகவியாலளர்களை நீதிமன்றம் வரை அழைத்து செல்வது நியாயமற்ற செயலாகும். எனவே இன்று முஷர்ரஃப்க்கு நடந்த இந்த நிகழ்வு நாளை இன்னொரு ஊடகவியலாளருக்கு நடக்க முடியும். ஊடகவியளாளர்கள் என்ற வகையில் இந்த செயற்பாட்டை வண்மையாக கண்டிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

ஊடகவியலாளர்கள் பேனா முனை கொண்டு புதிய யுகம் படைக்க கூடியவர்கள். முஷர்ரஃப் போன்ற நடுநிலை ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வாசலை மிதித்து விட்டால் ஏனைய ஊடகவியலாளர்களுக்கான சாவு மணியாக அது அமைந்துவிடும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -