வரலாற்றில் முதன் முறையாக சவூதியில் பெண்கள் தினம்: தடைகள் தகருமா..?

எஸ்.ஹமீத்-
வூதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் வரலாற்றில் முதன் முறையாகப் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ரியாத்திலுள்ள மன்னர் பஹத் கலாசார மண்டபத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் பெண்கள் தினக் கொண்டாட்டம் நாளை வரை நடைபெறவுள்ளது.

அரச குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களும் கலந்து கொண்டிருக்கும் இக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் இளவரசி ஜொஹரா பின்த் அல் சவுத் அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்.

பெண்கள் வாகனம் செலுத்துவதற்கான உரிமை, பெண் கல்வியின் மேம்பாடு, குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்கத்தை ஒழித்தல் மற்றும் ஆண்களின் துணையில்லாமல் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்வதற்கான தடையை நீக்குதல் போன்ற பல விடயங்கள் இந்த நிகழ்வுகளில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தடைகள் தகருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -