கொழும்பு பெரிய பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று காலை (04) ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இம்றான் மஹ்றூப், மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வி.ஹப்பு ஆராச்சி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள். அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் பாஹிம், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், அஹதிய்யாப் பாடசாலைகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் அமைச்சர் தேசியக் கொடியை ஏற்றியதுடன் பெரிய பள்ளிவாசலில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட நுழை வாயிலையும் அமைச்சர் திறந்து வைத்தார். இதன்போது வரவேற்புரையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் வழங்கியதுடன் சிங்களத்தில் துஆப் பிரார்த்தனையை மௌலவி அப்துர் றஹ்மானும், தமிழில் கொழும்பு பெரிய பள்ளியின் பிரதம இமாம் மௌலவி தஸ்லீமும் நிகழ்த்தினர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -