இனமத பேதமின்றி எல்லோரும் நடந்து கொண்டால் 70ஐ கோலாகலமாகக் கொண்டாடலாம்-மரிக்கார்


அஷ்ரப் ஏ சமத்-

இனமத பேதமின்றி எல்லோரும் நடந்து கொண்டால் 70 வது ஆண்டு சுதந்திரத்தை இதை விட கோலாகலமாகக் கொண்டாடலாம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்

இன மத பேத கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு எல்லோரும் இலங்கையர்கள் என்ற பரந்த சிந்தனையொடு செயற்பட்டு அடுத்த வருடம் எமது 70 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை இதை விட சிறப்பான முறையில் கோலாகலமாகக் கொண்டாடலாம் என்று கூறினார் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார். கொலன்னாவை கித்தம்பஹுவ பிரதேசத்தில் உள்ள களனி கங்கை விளையாட்டுக் கழகத்துக்கு 150000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கையளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாவாறு கூறினார்.

1948க்கு முன் போர்த்துக்கேய அந்நிய சக்திகளிடம் எமது நாடு அடிமைபட்டுக் கிடந்தது. நாம் பிளவுபட்டிருந்தமையே அதற்கு காரணம். சிங்கள மகா சபை என்று ஒன்றிருந்தது. அதேபோல ; தமிழசபை சோனகர்சபை என வௌ;வேறு அமைப்புக்கள் இருந்தன. நாம் இன ரீதியிலும் மதரீதியிலும் பிளவுபட்டிருந்ததால் எம்மை அடிமைப்படுத்த அவர்களுக்கு வசதியாக இருந்தது. எமது பிளவை அவர்கள் தமக்கு சாதகமாக்கி எமது நாட்டை தமது அடிமை நாடுகளில் ஒன்றாக வைத்திருந்தனர். ஆனால் அதற்கு பின் வந்த காலத்தில் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஏனைய தமிழ் முஸ்லிம் தலைவர்களும் அதிர்ஷ்டவசமாக இதை புரிந்து கொண்டனர். 1946 முதல் 1948 வரையான காலப்பகுதியில் இந்தப் புரிதல ; மேலும் வலுவடைந்தது. இதன் காரணமாக சகலரும் இந்த தாய் நாட்டில் பிறந்து இதே பூமியில் மரணம் அடைபவர்கள் என்பதை உணர்ந்து பேதங்களை மறந்து ஒற்றுமைபட்டனர். 

இதனால் தான் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரத்தை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இருந்தாலும ; இந்த 69வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது ஒரு விடயத்தை நாம் கவலையுடன் நினைவு கூற வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் மக்களை சமய ரீதியாகவும் இன ரீதியாகவும் நாம் பிரித்து வைத்துள்ளோம ; என்பதே அந்த கவலைக்குரிய விடயமாகும். 70வது சுதந்திரத்தை கொண்டாட இந்த நாடு எஞ்சியிருக்குமா என்று மகிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். இன்று நான் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு முதற் தடவையாக கொலன்னாவையில் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய சகல தரப்புக்கும் தலைமை தாங்க என்னால் முடிகின்றது. பௌத்த மதகுருமாருடன் மிகவும ; ஒத்துழைப்போடு பணியாற்றுகின்றேன்.

மகிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்தால் நிச்சயம் இது சாத்தியமாகி இருக்காது. பிளவுபட்டு எமது இலட்சியங்களை நாம் இழந்து விட முடியாது. இலங்கையர்களாக நாம் ஒன்றிணைந்து உலகை வென்ற ஒரு தேசத்தின் மக்களாக மாற வேண்டும ;. கடந்த ஆட்சியாளர்கள் தமது சுய தேவைக்காக தமிழ் சிங்கள முரண்பாடுகளை தோற்றுவித்தனர். அதேபோல் தமிழ் முஸ்லிம் சிங்கள முரண்பாடுகளையும ; அவர்கள் தோற்றுவித்தனர். அவர்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இவ்வாறு செய்தனர். 

ஆனால் எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. இந்த நாட்டை உலகை வென்ற நாடாக ஆக்க வேண்டும ; என்பதுதான் மக்களின் தேவையாக இருந்தது. அன்று வெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் பெற எமது தலைவர்கள் அனைவரும ; ஓரணியில் திரண்டனர். அதேபோல் இலங்கையர்கள் என்ற வகையில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் 70வது சுதந்திரத்தை இதை விட சிறப்பாக பெருமைக்குரிய ஒரு தேச மக்களாக நாம் எல்லோரும் கொண்டாடலாம் என்பதே எனது கருத்தாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -