69ஆவது சுதந்திர தினத்தையொட்டிய ’மருதம் வெற்றிக்கிண்ணம்’ - 2017

பி.எம்.எம்.ஏ.காதர்-
லங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை மருதம் விளையாட்டுக்கழகம் நடாத்திய 'மருதம் வெற்றிக்கிண்ணம் - 2017' கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை (04-02-2017) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத் தொகுயில் நடைபெற்றது. அணிக்கு 11பேர் பங்குபற்றிய 10 ஓவர்களைக் கொண்ட இந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில்; மருதமுனை மிமா அணியை எதிர்த்து மருதமுனை அஸ்னல் அணி ஆடியது. 

இதில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய மிமா அணி பத்து ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 64 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்து ஆடிய அஸ்னல் அணி பத்து ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 57 ஓட்டங்களைப்பெற்றது. மிமா அணி ஆறு ஓட்டங்களால் அஸ்னல் அணியை வெற்றி கொண்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -