களுத்துறை - கட்டுக்குறுந்த பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் படகை செலுத்திய படகோட்டியை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
படகோட்டி கைது செய்யப்பட்டு இன்றைய தினம் களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே படகோட்டி கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன் 20 இற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.