இன நல்லுறவிற்கு தடையாக இருப்பது என்ன,,? கமலதாஸ் விளக்கம்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ந்து சமூகத்தினை காப்பாற்றுகின்ற அல்லது இந்துத்துவ விழுமியங்களை காப்பாற்ற நினைக்கின்ற சமூக சீர்திருத்த வாதியாக தன்னை அழைத்துகொள்பவரும், இந்து மகா சபை, அகில இலங்கை இந்து மாமன்றம், விஷ்வ ஹிந்து பரிசத் எனும் உலக இந்து சம்மேளனத்தின் பிரதி நிதியுமான வருன்-கமலதாஸ் இலங்கையில் அதிலும் முக்கியமாக வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் பேசும் சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களினுடைய இன நல்லுறவிற்கு தடையாக இருக்கின்ற விடயங்கள் எவை என்பது சம்பந்தமாக முன்வைக்கின்ற முக்கியமான கருத்துக்கள் அடங்கிய நேர்காணலின் காணொளி எமது இணைய வாசகர்களுக்காகவும், தமிழ்- முஸ்லிம் சமூகங்களின் சிந்தனைகளுக்காகவும் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நேர்காணலில் முக்கிய விடயங்களாக முன்வைத்து கேட்கப்பட்ட கேள்விகளான..

01-வடகிழக்கு மாகாணங்களில் யுத்தகாலத்திற்கு முற்பாடும் சரி அதற்கு பிற்பாடும் சரி முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கி வருகின்ற அடிப்படை உரிமைகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் பேசும் சமூகம் எவ்வாறான தீர்வுகளை முஸ்லிம் சமூகத்திற்கு முன்மொழிய வேண்டும் அல்லது விட்டுக்கொடுப்புச் செய்ய வேண்டும்?

02- வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் எதிர் காலத்தில் இணைக்கப்படுமானால் அதில் முஸ்லிம்களினுடைய பாதுகாப்பும் ஏனைய உரிமைகளுக்குமான உத்தரவாதத்தினை தமிழ் பேசுகின்ற இந்து சமூகம் எவ்வாறு தீர்த்து வைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.?

03- இந்திய நாட்டில் அதிலும் முக்கியமாக குஜ்ராத், மும்பாய் போன்ற மானிலங்களில் முஸ்லிம்களின் முக்கிய உணவாக கருதப்படுகின்ற மாட்டிறைசிக்கு தடை விதித்து உணவுக்காக மாடுகளை அறுக்கும் முஸ்லிம்களுக்கு பகிரங்கமாக தண்டனை விதிக்கும் கடும் போக்கு இந்துத்துவ அமைப்புக்கள் பற்றிய கமலதாஸினுடைய கருத்துக்கள்?

04- இந்தியாவில் செயற்படுகின்ற இந்துத்துவ கடுபோக்கு சிந்தனையாளர்களான சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி, விஷ்வ ஹிந்து பரிசத், போன்ற அமைப்புக்கள் அண்மைக்காலங்கலாக மட்டக்களப்பில் காற்பதிப்பதன் ஊடாக வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் பேசும் சமூகமான முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அச்ச சூழ்நிலைகள் சம்பந்தமாக கமலதாஸினுடைய கருத்து என்ன?

05- இஸ்லாமிய அடிப்படைவாதம் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதம் இந்துத்துவ தீவிரவாதம் போன்றவைகள் சம்பந்தமாக கலமதாஸினுடைய பார்வை எதுவாக உள்ளது?

06- தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் தேங்காயும் பிட்டும் போல் வாழ்வதற்கு எவ்வாறான இன நல்லுறவினை நீங்கள் பிரதி நித்துவப்படுத்துகின்ற இந்துத்துவ அமைபுக்களும் நீங்களும் முன்னெடுக்க இருக்கின்றீர்கள்?

07- முஸ்லிம் மக்கள் வடகிழக்கில் இழந்துள்ள பூர்வீக காணிகளுக்கு நீங்கள் பிரதி நித்துவப்படுத்துகின்ற அமைப்புக்களும், நீங்களும் முன்வைக்கின்ற தீர்வுகள் என்ன?

08- வடமாகாண தமிழர்கள்- கிழக்கு மாகாண தமிழர்கள், யாழ்ப்பாண தமிழர்கள்- மட்டக்களப்பு தமிழர்கள் போன்ற வேறுபாடுகளை இன நல்லுறவு என்ற ரீதியில் கமலதாஸ் எவ்வாறு பார்க்கின்றார்?

போன்ற பல முக்கிய கேள்விகளோடு, தமிழ் பேசுகின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழ் பேசும் சமூகங்களாக வடகிழக்கில் மீண்டும் ஒன்றாக ஒற்றுமையுடன் சகல விடயங்களிலும் வாழ்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை இரண்டு சமூகங்களையும் பிரதி நிதித்துவபடுத்துகின்ற மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், கடும்போக்கு சிந்தனையாளர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து விட்டுக்கொடுப்புக்களுடன் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இந்துக்களின் முக்கிய பண்டிகை நாளான தைப்பொங்கல் தினத்தன்று கமலதாஸ் தெரிவித்த விரிவான கருத்துக்களே இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -