தமிழ்ச் சமூகமே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது - ஷிப்லி பாறுக் ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வில் 

ள்ளிவாயல்கள், பொது நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளுக்கு தங்களால் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு பொருட்களை கையளிப்பதற்கு உரிய இடங்களுக்கு செல்லுகின்றபோதுதான் எவ்வாறான செயற்பாடுகளை நோக்காகக் கொண்டு அமைப்புக்கள் செயற்படுகின்றன. அவர்களுக்கான குறைபாடுகள் என்ன என்பதனை அறியக்கூடியதொரு வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒயொதிக்கீட்டிலிருந்து ஓட்டமாவடி இஷ்றா கல்வி நிலையத்திற்கு ஒலி பெருக்கி சாதனங்களை கையளிக்கும் நிகழ்வு அதன் தலைவர் பாரூக்கான் ஆசிரியர் தலைமையில் 2017.01.22ஆந்திகதி- ஞாயிற்றுக்கிழமை இஷ்றா கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்;

இப்போது எதனை எடுத்துக்கொண்டாலும் அதற்கு பின்னால் ஏதோதொரு வகையில் அரசியல் பின்னனியாகவே காணப்படுகின்றது. மாற்று மத சகோதரர்கள் அல்குர்ஆனுக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாதையையும் அதனை அறிந்துகொண்டு செயற்படுகின்ற நாங்கள் அல்குர்ஆனுக்குரிய மதிப்பையும். மரியாதையையும் கொடுப்பதில்லை.

இதனை ஏன் சொல்லுகின்றேன் என்றால் ஆட்சி அதிகாரங்களை நாங்களே வழங்குகின்றோம் அதனை நாங்களே அடியோடும் பிடுங்கியும் எடுக்கின்றோம் என அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். ஆனால் இதனை நம்புகின்ற நாங்கள் அரசியல் அதிகாரங்களுக்காக எங்களுக்குள்ளே பிரச்சினைப்படுகின்றோம். எங்களுடைய உரிமைகள் என்று வீதிகளையும், கட்டடங்களையும்தான் நாங்கள் கேட்கின்றோம். சமூகம் சார்ந்த விடயங்களில் அரசியல் அதிகாரத்தின் மூலம் நாங்கள் எதனை சாதித்து விட்டுப்போகப் போகின்றோம் என்கின்றதொரு தேவைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.

இதற்காக ஐம்பது வருடத்திற்கு முன்பிருந்த அரசியல் கலாச்சாரத்தினை எடுத்துப் பார்க்கின்றபோது இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கென்று தனியானதொரு சட்டத்தினை உருவாக்கி இருக்கின்றார்கள். உலகத்திலே சிறுபான்மை சமூகமாக வாழுகின்ற எந்தவொரு நாட்டிலும் இல்லாதொரு சலுகை எங்களுடைய ரமளான் காலங்களில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற விடுமுறை இவ்வாறான விடயங்கள்தான் எங்களுடைய அரசியல் மூதாதைகள் எங்களுக்காக செய்துவிட்டுப்போன சமூகம் சார்ந்த உரிமைகளாகும் என தெரிவித்தார்.

மேலும், இன்று எம்சமூகத்தில் கல்வி சார்ந்த விடயங்களில் அரசியல் தலையீடுகள் அதிகம் காணப்படுகின்றது. எமது ஏனைய சமூகமான தமிழ் சமூகத்தை எடுத்துக்கொண்டால் அவர்களிடத்தில் கல்வி சார்ந்த விடயங்களில் எந்தவொறு அரசியல் தலையீடுகளும் இருக்காது. ஒரு அரசியல் வாதியின் பெயர் கூட தங்களுடைய பாடசாலையில் வைக்க மாட்டார்கள் இவ்வாறு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகமாக தமிழ்ச் சமூகம் காணப்படுகின்றது.

ஆகவே கல்வி சார்ந்த விடயங்களில் நாங்கள் அரசியல் சார்ந்த தலையீடுகளை மேற்கொள்ளாமல் எமது சமூகத்தின் கல்வி சார்ந்த விடயங்களில் அதிக கரிசனை கொண்டு எதிர்காலத்தில் சிறந்தாரு அரசியலற்ற கல்விச் சமூகம் ஒன்றினை உருவாக்க அனைவரும் செயற்பட வேண்டுமென்று தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இஸ்ரா கல்வி நிலையத்தின் உறுப்பினர்கள், அதிபர் சேவையில் சித்தியடைந்த ஆசிரியர்களான சாதிக்கீன், சஹாப்தீன், அஹமட் லெப்பை, உபைத், அஜ்மீர் மற்றும் மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் ஹைதர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -