வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை திருகோணமலையில்.!

அப்துல்சலாம் யாசீம்-
னாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து செயற்படுத்தும் ஸ்ரமிக்க சுரெக்கும் நடமாடும் சேவையானது திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல அவர்களின் பங்கேற்புடன் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார உட்பட அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

இவ் நடமாடும் சேவையானது திருகோணமலை நகர மண்டபத்தில் பெப்ரவரி 1ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையும்,மதியம் 1.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை குச்சவெளி பிரதேச செயலகத்திலும்,பெப்ரவரி 2ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் 11 மணிவரை கிண்ணியா பிரதேச செயலகத்திலும் ,மதியம் 1.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை மூதூர் பிரதேச செயலகத்திலும் ,பெப்ரவரி 3 ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் மதியம் 1.00 தொடக்கம் 4.00 மணி வரை கந்தளாய் பிரதேச செயலகத்திலும் இடம் பெறவுள்ளது.

இதில் பொது மக்கள் தங்களது வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகள் ஆலோசனைகளை அமைச்சருடன் நேரடியாக முன்வைக்கவும் கலந்துரையாடவும் மேலும் வெளிநாடு சென்று பாதிக்கப்பட்டவர்கள் உடல் ஊனமுற்றோர்கள் எஜமானால் சம்பளம் வழங்கப்படாது ஏமாற்றப்பட்டவர்கள் முகவர்களினால் ஏமாற்றப்பட்டவர்கள் நாடு திரும்பவிருப்பவர்கள் வெளிநாடு சென்று காணாமல் போனவர்கள் போன்றோர்கள் விசேடமாக கலந்து கொள்ளுமாறும் அனைவரும் கலந்து பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -