க.கிஷாந்தன்-
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 2வது ஆண்டு பதவி பூர்த்தியை முன்னிட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 20 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 08.01.2017 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் புத்திரசிகாமணி, மலையக மக்கள் முன்னணி செயலாளர் ஏ.லோறன்ஸ் என பலரும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, வீடுகளை திறந்து வைத்தனர்.




