பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் வீதிக்கு ஒருநாள் மக்கள் குறைகளை கேட்டறியும் வேலைத்திட்டம்

எம்.ரீ. ஹைதர் அலி-

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் வீதிக்கு ஒருநாள் மக்கள் குறைகளை கேட்டறியும் வேலைத்திட்டம் 2017.01.19ஆந்திகதி - வியாழக்கிழமை புதிய காத்தான்குடி SNT வீதியில் நடைபெற்றது.

இதன்போது புதிய காத்தான்குடி அப்ரார் நகர் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ள நூற்றிட்கும் அதிகளவான மக்கள் வருகைதந்து தங்களது பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொண்டனர்.

வாழ்வாதாரம், சமுர்த்தி, அரச நிவாரனங்கள், குடிநீர், காணி விவகாரங்கள், வீதி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வுகள் வழங்கப்படக்கூடிய அதிகளவான பிரச்சினைகளுக்கு வீதிக்கு ஒருநாள் மக்கள் குறைகளை கேட்டறியும் வேலைத்திட்டத்தினூடாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதோடு தீர்க்கப்பட வேண்டிய மக்களின் ஏனைய விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மக்களின் பிரச்சினைகளை அவர்களின் இடங்களுக்கே தேடிச் சென்று கேட்டறிந்து தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் மக்களின் குறைகளை நேரில் கண்டறிவதோடு, பொதுமக்கள் அரசியல் வாதிகளை தேடிச்சென்று தீர்வுகளை பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்களையும் தவிர்க்கும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் இத்தகைய வீதிக்கு ஒருநாள் மக்கள் குறைகளை கேட்டறியும் வேலைத்திட்டங்கள் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னேடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -