எஸ்.எம்.சன்சீர்-
இறக்காமம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் வேண்டுகோளுக்கு இனங்க இறக்காமம் முகைதீன் கிராமத்திலுள்ள மஸ்ஜிதுல் நபிலா றாஸித் பள்ளிவாசலுக்கு அன்மையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது சொந்த நிதியிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்களை அப்பள்ளிவாசல் நிருவாக சபையினரிடம் கையளித்தார்.
மேலும் அக்கிராமத்தையும் பள்ளிவாசலையும் பார்வையிட்ட அவர் பள்ளிவாசல் மதிலுக்கான நிதியுதியினை செய்தருவதாகவும் இப்பிரதேசத்திற்கு என்னால் இயன்ற அளவில் அபிவிருத்திகளை செய்து தருவேன் என்றும் வாக்களித்தார். இந்நிகழ்வின் போது இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர், யு.கே.ஜெபீர் மௌலவி மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.ஜிப்ரி, எம்.எல்.முஸ்மி மற்றும் இறக்காமம் அமைப்பாளர் எஸ்.எல்.நிசார் ஆகியோருடன் கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம். அதீக் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.



