அல்-ஹிதாயா, பழைய மாணவர் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டமும், நிருவாகத் தெரிவும்!

ஹைதர் அலி-
ட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டமும், நிருவாகத் தெரிவும் 2017.01.27ஆந்திகதி - வெள்ளிக்கிழமை பி.ப. 04.30 மணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலையின் முதல்வர் ஏ.எல். அபுல்ஹசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுச்சபைக் கூட்டத்தில் முன்னாள் செயலாளர் ஏ.எல். யாஸீன் அவர்களினால் சென்ற வருடத்திற்கான பொதுச்சபைக் கூட்டறிக்கை சபையில் வாசிக்கப்பட்டு சபையோரின் ஏகோபித்த விருப்பத்துடன் பிரேரிக்கப்பட்டு ஆமோதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திற்கான புதிய நிருவாகத் தெரிவு இம்பெற்றது.

நிருவாகத் தெரிவின் விபரம்

செயலாளர் - அல்-அஸ்ஹர்
உபசெயலாளர் - றிஸ்வி (ஆசிரியர்)
பொருளாளா் - மர்சூக் (அதிபர்)

உறுப்பினர்கள்

யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக
நஜீம் (ஆசிரியர் மற்றும் பஹாஸ்தீன் (ஆசிரியர்)

அல்-அக்ரம் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக
தஸ்லீம் மற்றும் யாஸீன் (முன்னாள் செயலாளர்)

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பாக
ஹைதர் அலி மற்றும் பிர்னாஸ் (ஆசிரியர்)

அஷ்-ஷபர் ஒன்றியத்தின் சார்பாக
முர்ஷித் மற்றும் சப்ரான்

நலன் விரும்பிகளாக

ஐயூப்கான் (அதிபர்), அன்வர் (ஆசிரியர்), சில்மி (வைத்தியர்), பைறூஸ் மற்றும் பாரீஸ் (பத்திரிக்கையாளர்)
ஆகியோரும் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக புதிய நிருவாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

அத்தோடு பாடசாலை அபிவிருத்திக் குழுவுக்கு பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக செயலாளர் அல்-அஸ்ஹர் மற்றும் பஹாஸ்தீன் ஆசிரியர் இருவரும் தெரிவு செய்யப்பட்டனர். இறுதியாக பாழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளர் அல்-அஸ்ஹர் அவர்களின் நன்றி உரையுடன் பொதுச்சபைக் கூட்டம் நிறைவுற்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -