விசேட மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (13) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர், மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் திருமதி சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் இரு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆராயப்பட்டது.
1. வரட்சிக்கால நிலைமையை எதிர்நோக்குதலும் உணவு பாதுகாப்பும்.
2. வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டு என்ற தலைப்பில் ஆராயப்பட்டது.

