ஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (22) மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் , ‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன்னெழுச்சி போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் ஜல்லிக்கட்டு மிருகவதை. எனவே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் நான். தமிழர் பண்பாடு எனக் கருதப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம், சிறுவயது திருமணம் என்பன இப்போது நடைமுறையில் இல்லை.
இதே போன்று மிருகவதையான ஜல்லிக்கட்டையும் நாம் கைவிட வேண்டும். வடக்கில் நடைபெறும் மாட்டு வண்டி சவாரியும் மிருகவதை தான் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.
