யுவதிகளுக்கான சுய தொழில் பாடநெறி

எஸ்.அஷ்ரப்கான்-

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீமின் நிதி ஒதுக்கீட்டில், சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உளஹிட்டிவள கிளையின் அனுசரணையுடன் நடைபெற்று வரும் யுவதிகளுக்கான சுய தொழில் பாடநெறி கடந்த 3 மாத காலமாக அல் - மஹ்மூத் வித்தியாலயத்தில் நடைபெற்று வந்தது. இதற்கு வளவாளர்களாக எரந்தி, ரமணி ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

இப்பாடநெறியில் பங்குபற்றிய யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கலும் கண்காட்சி நிகழ்வும் எதிர்வரும் 2017.01.28 சனிக்கிழமை அல் - மஹ்மூத் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம் கௌரவ அதிதிகளாக முன்னாள் பியகம பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.எஸ். ஹசன் மற்றும் மு.கா வின் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் பியகம பிரதேச சபை வேட்பாளருமான எம்.எப். காதர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இப்பயிற்சி நெறியில் கைப் பை, கைத் தையல் பயிற்சி, சமையல் துறை ஆகிய 3 துறைகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -