பாட்டாளி
---------------------------
அடிவயிற்றில்
அக்கினியோடு
உடலது
வியர்வை கணத்து
உள்ளமதை சிறையிட்டான்
உன்னத பாட்டாளியவன்....
பல
உயிர்கள்
பசி தீர்க்க
பாட்டாளிப்
பட்டம் பெற்று
பாரிடம்
வாழ்த்துமது
பலபேர்க்கு
ஏனியானான்....
டாக்டர் மாஸ்டர் என
பட்டம் கண்டான்
பாட்டாளி
வியர்வையாளே....
பாட்டாளி கரம்
துருப்பிடிக்க
பல கரங்கள்
தூரிகை பிடித்து
தூய மனிதம்
கண்டது பூவுலகம்....
இவன்
வயிறு கஞ்சி குடிக்க
பல வயிறு
பாதாம் பழரசம்
பருகுகிறது
சிந்திக்க நேரமில்லை...
மண்ணை
உழுது உலகுக்கு
பொன் நெற்
கதிர்களும் தருகிறான்
பாடு
பட்டவனுக்கு
பாரிடம் சொந்தமென
பாரதியார் சொன்னார்
அன்று
படுத்துரங்க
பாதி நிலம் கூட
புவியில் இல்லயடா
பாட்டாளி பாதமெல்லாம்
பல பேரின் ஏனியடா
அரசாளும்
நாயகனே!!
உன் அடி வயிறு பசி போக்க
முதல் ஏனி-உன்
பாட்டாளி தந்தையடா
சுத்திவரும்
கதிரையில் நீ
நன்றி கெட்டு ஆளுகிறாய்.....
உலகோர்
உள்ளந்தனில்
உரமாக நின்றவன்
பாட்டாளி...
ஒரு மூளையில்
முடங்களாமோ...
உன்
மனமேன்
கல்லானது
ஒருமுறை கண்விழி நீ.....
பனி காற்று
கொட்டும் மழை ஊற்று
எல்லாமே
எமக்காக
தாங்கி நின்ற
பாட்டாளி பாவமடா....
உன்
பேனாவை பேசவிடு
பாட்டாளி வாழ்கவென்று
மாதந்தோறும்
மகிழ்வோடு
ஒரு தொகை கொடுத்து விடு....
பாரிடம்
சொந்தம் தந்த
பாட்டாளி
வர்க்கமது
படுத்துரங்க நாலடி
நிலமொன்றை
நன்றியுடன்
வழங்கிவிடு
பாட்டாளி மக்களுக்கு
பாசம் நீ தந்து விடு....
பிறக்கிற
புத்தாண்டில்-தன்
மகளுக்கு புத்தாடை
வாங்கித்தர முடியாது
அக்கினியாய்
அழுகையில் வெந்து போகும்
அப்பாவி பாட்டாளி
உயர்தோர் ஆடை கண்டு
மனதை அடக்கிக் கொண்டு
அப்பாக்கு ஆறுதல்
சொல்லும் அழகான
மகள் தங்கம்
அடுத்த வருசம்
வரும் அப்பா
இப்ப நீ கலங்காதே
கண்துடைக்கும்
செல்லமகள்.....
கனவுகளை
சுமந்து நிற்கும்
வயது வந்த கன்னி மகள்
கல்யாணம்
சீர் செய்ய
முடியவில்லை
சீமந்தமும்
செய்யவில்லை
செங்காற்று
புயலினிளே
செங்குருதி கொதிக்குதடா
கண்ணீர் வழியுதடா.....
தன்
ஆசை
அடக்கியவன்
நம் ஆசை
தீர்த்த
பாவப்பட்ட எல்லோரின்
அப்பாக்களும்
பாட்டாளி
புனிதர்கள் தானடா
பாட்டாளி மக்கள்
பாரில் சிறந்து வாழ
பல கரம் நாம் திறப்போம்
நிறைவான பலன் கொடுத்து
பாட்டாளி மக்களின்
கண்ணீர் துடைப்போம்....
வாழ்க பாட்டாளி மக்கள்
வாழ்க பாட்டாளியாய்
பாடுபட்டு கஸ்டப்பட்டு
என்னை காலத்தின் மத்தியில்
உலகோர் போற்றும்
பட்டதாரி ஆக்கிய
என் அன்பு தந்தை
உன் கண்களை
மூடிக்கொண்டு
வாழ்கிறாயே
என்
தந்தையே!
உங்கள் மண்ணறை
ஒளியாகி
சாந்தியாய்
வாழ்திட
இறைவனே அருள் புரி
என் தந்தைக்கு........
-ஆதில்-