கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைகான மலேஷிய உயர்ஸ்தானிகர் வான் ஸ்ய்டி வான் அப்துல்லாஹ் ஆயோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மலேஷிய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
இதன் போது கிழக்கிற்கான புதிய முதலீடுகளை அதிகரித்தல்.அதன் மூலம் கிழக்கில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்த வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மலேஷிய உயர்ஸ்தானிகருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


