"உனக்காக என் ஒற்றை ரோஜா"

சுட்டெரிக்கும் வெயிலைவிட 
விடாமல் எரிக்கும் 
உன் நினைவுகள் கொடுமை. 

வாடியது என் மனசு 
மூடியது- உன் மனசாட்சி
 நீ வரும் நாள் பார்த்து 
நிற்கிறது என் மனசு 
வாய் மூடிச் சிரிக்கிறது உன் வயசு. 

விழி நீர் சேமிக்கிறது என் விழிகள். 
வினாத்தாள் கொடுக்கிறது உன் மௌனம். 
விடியல் தேடுகிறது என் வானம் 
அமாவாசையாய் என் நிலவு. 

கருக்கொண்டு நிற்கிறது 
என் மேகக்கூட்டங்கள். 
காற்றடித்து சிதைக்குறது-
உன் பார்வைப் புயல். 
மரணம் கேட்கிறது என் வாலிபம் 
மரணப் படுக்கை மட்டும் 
கொடுத்து விட்டுச் சென்றது 
உன் நினைவுகள். 

எனக்கும் மனசு இருக்கிறது என்று 
ஏன் புரியாமல் போனது உனக்கு 
ஒரு நாள் ஆணின் காதல் வலி புரியும் 
அப்போது நீ சொல்வாய் 
எங்கிருந்தாலும் நலமாக இரு என்று 

ஆனால் கதறி அழும் உன் உள்ளம் 
அன்று இதயத்தால் அழுது கொண்டே 
நானும் சொல்லும் வார்த்தை 
யாரோடு நீ வாழ்ந்தாலும் 
உன் நினைவுகளோடு 
நான் வாழ்கிறேன் என்று 

கடற் கரையில் 
காற்றடம் பதித்தித்திடும் காதாலர்கள் 
அதை ஏற்க மறுக்கும் கடலலை. 
ஓடையில் உதிர்ந்து 
மிதந்து போகும் பூக்கள். 
உதிர்ந்து போனதா 
என் மீது நீ வைத்த அன்பு பூக்கள் 

நாடித் துடிப்பின் நாழிகைகளின் 
நாட் குறிப்பேடுகளில் எல்லாமே
 உன் பெயர் மட்டுமே பதியப்படுகிறது. 

காற்றடம் அழித்த 
கடலலையிடம் கேட்டேன் 
அழுகின்றன அலைகள் 
தன் காதலைத்தான் ஓயாமல் 
தேடி கரைவருகிறதாம். 

ஓடையின் ஓர மரங்களைக்கேட்டேன் 
அக்கரையில் அழகுமேனி குளித்திடும் 
அவளுக்கு தன் பூக்களை உதிர்ந்து 
அவளுக்கு தினம் தோறும் 
தூதனுப்புகிறதாம். 
அவள் ஆற்றோரமாய் மிதந்து வரும் 
பூக்களை கையால் அள்ளி 
முகர்ந்து கொள்கிறாள் என்பதற்காக.. 

ஏ பெண்ணே... 
என் அன்பு மட்டுமே உன்னிடம் 
சுவடுகள் அற்ற சஹாராவாகிப் போனதோ... 
சமாதியான என் அன்பு 
சரித்திரம் அற்றதாகலாம் -
ஆனால் சரித்திரம் படைக்கும் 
என் அன்பு சாம்ராஜ்யம் 
சாஜகானின் தாஜ்மஹால் 
இல்லாவிட்டாலும் என் கல்லறையிலாவது 
ஒற்றை ரோஜாவுடன் 
உன் பெயரும் பதிந்து இருக்கும். 

அந்தோ.. 
உன் காதலனுடன் வந்தாலும்
 என் ஒற்றை ரோஜா வாடாமலிருக்க 
ஒரு முத்தமாவது 
கொடுத்து விட்டுச்செல் 
என் ஒற்றை ரோஜா மட்டுமாவது 
கல்லறையில் வாடாமல் இருக்கட்டும்.. 

இதோ உனக்காக என் ஒற்றை ரோஜா - உணர்ச்சி பூக்கள் ஆதி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -