காத்தான்குடி மீடியா போரம்-
காத்தான்குடி மீடியா போர உறுப்பினர்களுக்கான புகைப்படக் கருவிகள் (கேமராக்கள்) கையளிக்கும் நிகழ்வு நேற்று (04) புதன்கிழமை இரவு காத்தான்குடி கடாபி ஹோட்டல் மண்டபத்தில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்றது.
களத்தில் நின்று செய்தி சேகரிக்கும் காத்தான்குடி மீடியா போரத்தின் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் சுயாதீன செய்தி சேகரிப்புக்குக்கான படப்பிடிப்புக்கு உகந்த வகையிலும் இப்புகைப்படக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கின் பன்முகப்படுத்தப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 12 புகைப்பட கருவிகள் (கேமராக்கள்) வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வின் அதிதிகளாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸபி, காத்தான்குடி முன்னால் நகர முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை, பாவலர் சாந்தி முகைதீன், காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புகைப்பட கருவிகளை வழங்கிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் அவர்களுக்கு எமது போரத்தின் உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.





