முதலமைச்சர் மீதான காழ்ப்புணர்வில் ஹிஸ்புல்லாஹ் தன்னிலை மறந்து அறிக்கை விடுகின்றார்


 றாவூர் வைத்தியசாலை விடயத்தில் முதலமைச்சர் தொடர்பில் காழ்ப்புணர்வில் கருத்துக்களைதெரிவித்ததன் மூலம் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி என்றபடித்தளத்தில் இறங்கி தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள்தவிசாளர் அப்துல் நாசர் தெரிவித்தார்

காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கும்போதே ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அப்துல் நாசர் இந்த விடயத்தினைக் கூறினார்.

ஏறாவூர் ஆதாரவைத்தியசாலையைப் பொறுத்தவரையில் எமது மாவட்டத்தில் இருக்கின்ற ஏனையஆதார வைத்தியசாலைகளோடு ஒப்பிடுகின்ற போது மிகக் குறைந்த பௌதீக மற்றும் மனித வளங்களோடு இயங்கிவருகின்றது. இவ் வைத்தியசாலைக்கான தேவைகளை அவ்வைத்தியசாலையின்வைத்திய அத்தியட்சகர் எமது மாவட்டத்தின் சகல அரசியல் வாதிகளிடமும் அத்தியாவசியத்தேவைகளை கோரி பல கடிதத் தொடர்புகளை ஏற்படுத்திருந்தார். அந்த வகையில் ராஜாங்க அமைச்சர்ஹிஸ்புல்லா அவர்களுக்கும் 26.03.2016 அன்று அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெளிநோயாளர்பிரிவுக்கான உபகரணங்கள் தொடர்பில் வேண்டுகோள் கடிதம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

. இக் கோரிக்கைகளுக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காத ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள்காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ததை மறைப்பதற்காகஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கும் தான் கொடுக்க முன்வந்ததாக நாடகம் ஆடுவது மிகத் தெட்டத்தெளிவாக விளங்குகிறது.

ஒரு அரசாங்க வைத்தியசாலைக்கு ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் பாரிய நிதியை கொடுப்பதாகஇருந்தால் அதனை எழுத்தின் மூலம் வைத்திய அத்தியட்சகரிடம் தெரிவித்திருக்கமுடியும் வெறும் தொலைபேசியில் சாதாரணமாக தொடர்புகொண்டுவிட்டு முதலமைச்சரின் மீது பழியைப்போடுவது இவர்களின் வழமையான அரசியல் செயற்பாடாக இன்று மாறியிருக்கிறது.

கடந்த 2015 மார்ச் மாதம் அளவில் முதலமைச்சர் இருக்கத் தக்கதாகவே 26.03.2016 அன்று வைத்தியஅத்தியட்சகரினால் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களுக்கு வைத்தியசாலையின் தேவை கருதியகடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை முதலமைச்சர் தடுக்கவில்லையே ? ஏன் அக் கோரிக்கைக்கடிதத்தின் பிரகாரம் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களினால் அத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க முடியாமல் போனது ?.

கௌரவ முதலமைச்சரைப் பொறுத்தவரையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நீண்டகாலகுறைபாடுகளை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அவர்களின் கோரிக்கைகளின் பிரகாரம்மாகாண, மற்றும் மத்திய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்மூலம் நிறைவு செய்திருக்கிறார். மேலும்செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றார் என்பது வெளிப்படை உண்மையாகும்.

அந்தவகையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடம் மற்றும் மகப்பேற்று மருத்துவ விடுதிக்கானகட்டடம் அதனோடு இணைந்ததாக அவற்றுக்கான உபகரணங்கள் தேவையான கீழ்மட்ட ஊழியர்கள்நியமனம் என்று பல்வேறு வகைப்பட்ட வேலைத்திட்டங்களை வைத்தியத் துறையில் செய்துமுடித்திருக்கிறார்.

மேலும் ஏறாவூர் ஆதாரவைத்தியசாலைக் கட்டடத்தொகுதிக்கான பாதுகாப்பு கண்காணிப்புக் கமரா (CCTV)கட்டமைப்பினையும் , நோயாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு மின்தூக்கி (Passenger Lift)வசதியினையும் செய்து கொடுப்பதற்கான நிதி மூலங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார். 

இதற்கு மேலதிகமாக 2017 இல் சுமார் 137 மில்லியன் ரூபா செலவில் வைத்தியசாலைக்கான கட்டடத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகின்றார்.  எனவே, முதலமைச்சர் தனது குறுகிய கால அரசியல் பிரவேசத்தில் வைத்தியசாலையின் நீண்டகாலத்தேவைகளை நிறைவுசெய்து வருவது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இது தவிர ஏனைய பிரதேசங்களைப்போன்று பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் திட்டமிட்ட வகையில் முனைப்புடன்செய்துவருவது இந்த சிரேஷ்ட அரசியல் தலைமைக்கு இப்போதுதான் உறைத்திருப்பதாகத் தெரிகிறது .

கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் கிழக்கின் அபிவிருத்திக்காக தினந்தோறும் மத்தியரசுடன் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகொண்டும் கிழக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்திகளைக் கண்டு இன்புறும் முதல் நபரா அவரே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஏறாவூர் பிரதேசத்தில் பல அரசியல்வாதிகளும் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைகளை செய்துவருகிறார்கள். இவற்றுக்கு முதலமைச்சர் அவர்கள் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருப்பதில்லை.அவ்வாறிருக்க ஆதாரவைத்தியசாலைக்கான அபிவிருத்தியை முடக்கினார் என்று சொல்வதில் என்னநியாயமிருக்கிறது. அப்படித் தடுப்பதற்கு முதலமைச்சருக்கு என்ன தேவையிருக்கிறது ?.

இன்னும் மற்றவர’ மீது சேறு பூசி அரசியல் நடத்தலாம் எனும் மனநிலையில் இருந்து கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் மாறாமல் இருப்பது தரத்தைக் காட்டுவதாக அமைவதாகவும்சி ரேஷ்ட அரசியல்வாதி என்பது அவரது அரசியல் காலத்தை வைத்து கணிப்பது அல்லவெனவும் அவரது நாகரிக பண்புகளை வைத்து கணிப்பது என்பதுடன் அவ்வாறு கணித்தால் அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களே தமது நிலையை உணர்ந்து கொள்வார்கள்,

கிழக்கு மாகாண சகல துறைகளிலும் அபிவிருத்தி அதன் மக்கள் துன்பங்கள் அகன்று மகிழ்ச்சியுடன் வாழ்வதே கிழக்கு முதலமைச்சரின் கனவு எனவும் அதை விடுத்த ஏனைய சில அரசியல்வாதிகளைப் போன்று ஆதாரமற்ற சில்லறைத் தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர் அல்லர்.

மக்களிடம் பிரதேச அரசியல்வாதங்களையும் கட்சி அரசியல் பேதங்களையும் வளர்த்து கௌரவ அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பெறப்போகும் இலாபம் தான் என்னவென்பது தெரியவில்லை என்பதுடன் இறைவனைப் பயந்து தமது கருத்துக்களை அவர் முன்வைக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட செய்திக்கு கிளிக்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -