புல்மோட்டையில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!

அப்துல்சலாம் யாசீம்-
புல்மோட்டை கொக்கிளாய் களப்பு சிறுகடல் மீனவர்கள் சுமார் 60 வருட காலமாக தொழிலாக செய்து வந்த கட்டுவலைத்தொழிலை நிறுத்தியமையை
மீண்டும் பெற்றுத்தருமாறு கோரி இன்று (15) பிற்பகல் 4மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கவனயீர்ப்பு பேராட்டம் புல்மோட்டை கொக்கியாய் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக கணிய மணல் கூட்டுத்தாபனத்திற்குச்சென்று மீண்டும் இவ்விடத்திற்கு வந்தடைந்தது.

இப்போராட்டத்தில் புல்மோட்டை பிரதேசத்தைச்சேர்ந்த 21 சங்கங்களின் 2500 க்கும் மேற்பட்ட மூவின மீனவர்களும் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை மீனவர் சங்கத்தின் அமைப்பாளரும்-மக்கள் விடுதலை முன்னணியின் தெற்கு மாகாண சபை உறுப்பினருமான ரத்ன கமகே மற்றும் திருகோணமலை மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணியின் அமைப்பாளருமான எச்.அருண் மற்றும் புல்மோட்டை சிறுகடல் மீனவர் அபிவிருத்தி மத்திய கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் இ.சயிபுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் மீனவர்கள் கையொப்பமிட்ட மகஜரொன்றையும் அதில் இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் அமைப்பாளரிடம் கையளித்தனர்.

இம்மகஜரில் திருகோணமலை மாவட்டத்திற்கு உரித்தான புல்மோட்டை கொக்கிளாய் களப்பில் மீனவ மக்கள் இதுவரை உபயோகித்த வலைகளை சட்ட விரோதமானதென அறிவித்து மீன்பிடி மற்றும் கடல் வளத்திணைக்களத்தின் திருகோணமலை- முல்லைதீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் மூலம் தடை செய்யப்பட்டது.

இது தொடர்பாக நீதியானதும் நியாயமானதுமான பரிசோதனையை நடாத்த வலியுறுத்திப்பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு அறிவுறுத்தியும் இதுவரையில் அது தொடர்பான உறுதியான செயற்பாடு ஒன்றும் இடம் பெறவில்லை. இதற்கான உடனடித்தீர்வினை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தை வலியுறுத்தியும் மீன்பிடி மக்கள் அம்மகஜரில் கையொப்பமிட்டு அம்மகஜரை வழங்கினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -