கெழும்பு வீடமைப்பு பிரச்சினைகளை ஆராயும் அமைச்சரவை உபகுழு..!

கொழும்பு நகர எல்லைக்குள் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் வறிய ஏழை மக்களின் வீடமைப்பு பிரச்சினைகளை ஆராய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் இந்நியமணம் அமைச்சருக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் பைஸர் முஸ்தபா இது தொடர்பிலான நடவடிக்கைகளை தற்பொழுது பாரிய அளவில் முன்னெடுத்து வருகிறார். 

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு மேலதிகமாக அமைச்சர்களான மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க ஆகியோரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர்கள் கொண்ட இக்குழுவினர் தங்களது அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி பணித்துள்ளார். இந்தக்குழுவில் கொழும்பு மாநகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரளுமன்ற உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டுளள்ளனர். அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.காதிர்கான்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -