“ஜெயலலிதாவின் வாரிசு அஜீத் தான்” பரவும் புதுக்கதை..!

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்த செய்தி அறிந்ததும் பல்கேரியாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த தல அஜீத் உடனடியாக சென்னை திரும்பினார். அன்று அதிகாலையிலே முதல்வர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஏற்கெனவே முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நல்ல நட்புறவுடன் இருப்பவர் அஜீத் என்பது அனைவருக்கும் தெரியும். சினிமா உலகை பொறுத்தவரை ஒப்பனிங் கிங் என்று அழைக்கப்படும் அஜீத் லட்சகணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில் மலையாள மனோரமா என்ற கேரள தின இதழ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் ஜெயலலிதாவின் வாரிசு தல அஜீத் தான் என்று தமிழக ரசிகர்கள் கொண்டாடி வருவதாக தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆலோசனைப்படி முதல்வர் அரியணையில் ஏறியிருக்கும் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை விட அதிமுகவில் அதிக செல்வாக்குடன் அஜீத் திகழ்வதாகவும் எனவே அவர்தான் ஜெயலலிதா வாரிசு என்றும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -