அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை சிறைச்சாலையில் சிறைக்கைதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றிரவு (12) 7.25 மணியளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தம்பலகாமம்.தெழுங்குநகர் பகுதியைச்சேர்ந்த கே.பரமேஸ்வரன் (30வயது) எனவும் தெரியவருகின்றது.
திருகோணமலை சிறைச்சாலையில் கைது தடுக்கப்பட்டுள்ள அறைக்குள் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர் உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளதுடன் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.