எம்.ரீ. ஹைதர் அலி-
பிறைந்துறைச்சேனை றவ்லதுல் அத்பால் லிதாலிதில் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவும் மாணவர் வெளியேற்று நிகழ்வும் 2016.12.10ஆந்திகதி (சனிக்கிழமை) பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய பாலர் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் J. அலாவுதீன் (பின்னூரி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் றவ்லதுல் அத்பால் லிதாலிதில் இஸ்லாமிய பாலர் பாடசாலையின்
பணிப்பாளர் அஷ்-ஷெய்க் J. அலாவுதீன் (பின்னூரி) அவர்களினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, அதிதியினால் பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
“இஸ்லாமிய நெறிமுறைகளுடன் இணைந்த கல்வியினை எமது பிள்ளைகளுக்கு வழங்குகின்ற போதே எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த ஒழுக்கம் மற்றும் கல்வி அறிவுடன் கூடிய மனிதர்களாக உருவாகுவார்கள். எமது பிள்ளைகளின் கல்வியில் நாம் கவனம் செலுத்துவதனைப் போன்று அவர்களின் ஒழுக்க விடயங்களிலும் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
எமது பிள்ளைகள் எதிர்காலத்தில் உயர்ந்த தொழில்களை பெற்றுக்கொண்டாலும் அவர்களிடம் சிறந்த ஒழுக்கம் இல்லாதபோது சமூகத்தில் நன்மதிப்புள்ளவர்களாக அவர்கள் மாற முடியாது. அத்தகைய நல்லொழுக்கம் மிக்க சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அந்தவகையில் இஸ்லாம் மற்றும் உலகளாவிய கல்வியினை சிறந்த விதத்தில் வழங்கும் பிறைந்துறைச்சேனை றவ்லதுல் அத்பால் லிதாலிதில் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் சேவை பாராட்டத்தக்கது” என தனது உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு றவ்லதுல் அத்பால் லிதாலிதில் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் நிருவாக சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

